ஈஷா யோகா ஆதியோகி சிலை ஏன் யாரும் கோர்ட் கேஸ் போடல...

இதற்கு முன்பே பல பதில்கள் முறையாக தந்த போதிலும் சற்று வித்தியாசமான கோணத்தில் இருந்து உண்மையாக நடப்பது என்ன என்று உங்களுக்காக இதோ …


முதல்ல 2018 google மேப்ல ஈஷா யோகா மையத்தின் படத்தை பார்ப்போம் இது தெளிவாக உண்மையை உரக்க சொல்லும்படி அமைந்து உள்ளது.


இதில் தமிழ்நாடு Forest Department ஒரு ரோடு ஒன்றை இந்த மேப்பில் காண்பிக்கிறது அதில் விவசாய நிலம் மற்றும் குடியிருப்புப் பகுதி வெள்ளியங்கிரி மலையில் உள்ள காடுகளுக்கு அருகில் எங்கு உள்ளது என்பதைக் காண்பிக்கிறது.

நீங்கள் இந்த மேப்பை கூர்ந்து கவனித்தால் அதில் ஈஷா யோக மையத்திற்கு செல்லும் ரோடு ஒன்று இருப்பதைப் பார்ப்பீர்கள், அது சரியாக தியானலிங்கம் மற்றும் நலந்தா கிரௌண்ட் ஆப் ஈஷா பவுண்டேஷனிலிருந்து தொடரும். இந்தப் பாதை தான் பாரஸ்ட் அலுவலர்களும் கிராம மக்களும் பயன்படுத்தும் பாதை.


இந்த ரோட்டிற்கு இடது பக்கத்தில் பார்த்தால் ஒரு பரவலான இடம் தெரியும் அதில் பச்சை மற்றும் பிரவுன் புள்ளிகள் தெரியும் அதுதான் காடுகள் மற்றும் மலை பகுதி ஆகும்.


இங்கு மேப்பில் அமையப்பெற்றுள்ள ஆதியோகி சிலைக்கு கீழே வலது புறமாக விவசாய நிலம் இருப்பது தென்படும் உண்மையில் அந்த இடத்திற்குப் பெயர் "Karthick farms" இது ஒரு பிரைவேட் விவசாய நிலம். இதிலிருந்து வெளிப்படையாக ஒரு விஷயம் புரியும் அது ஆதியோகி சிலை காட்டில் அமைய வில்லை மாறாக விவசாய நிலத்தில் தான் உள்ளது.

உங்களுக்கு கூடுதல் விவரம் ஒன்று தருகிறேன்:

ஈஷா ஆஸ்ரமத்திற்கு மகா சிவராத்திரி அன்று சென்றிருந்த ஒரு தனிநபர் எடுத்த புகைப்படம் கீழே உள்ளது



இது பார்க்கிங் ஏரியாவில் உள்ள இடம். இங்கு நீங்கள் பார்ப்பீர்களேயானால் ஏராளமான கரும்பு தக்கை இருப்பதை காணலாம் இது 2017 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படம். நீங்களே நேரில் சென்று கூட பார்க்கலாம் ஏனெனில் இது ஒரு கரும்பு தோட்டம் சுற்றி நிறைந்து உள்ள இடம். இதுவே தெளிவாக இது காடு இல்லை தனியார் பட்டா விவசாய நிலம் என்பது உறுதியாக தெரிவிக்கிறது.


அரசின் ஆவணம் கூட இது விவசாய நிலம் தான் என்பதை தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது. அதில் இது ஒரு "wetland" என குறிப்பிட்டுள்ளது ஏனெனில் இங்கு குறிப்பிட்ட சில காலமாக விவசாயம் நடக்கவில்லை இந்த இடம் தான் தற்போது ஆதியோகி சிலை நிறுவப்பட்ட இடம் ஆகும்.



ஆதியோகி சிலை காட்டில்தான் அமைந்துள்ளது என்னும் புரளி பரவிவருவதற்கு காரணம் ஆதியோகி சிலை சுற்றி சில கிலோமீட்டர் தள்ளி காடுகள் உள்ளது. ஆனால் ஆதியோகி சிலை இருப்பதோ விவசாய நிலமாக பதிவிடப்பட்ட பட்டா நிலம் ஆகும்.


சிலருக்கு இந்த மேப்பை பார்த்து புரிந்து கொள்வதில் கூட கடினமாக உள்ளது. அதனால் சில தேவையில்லாத வதந்திகளை நம்பி ஏமாந்து போகிறார்கள் அவர்களுக்காகவே கீழே இதைப்பற்றி ஒரு விரிவான படம்.





இந்த புரளிகளிலும் வதந்திகளிலும் ஈஷாவிற்கு எதிராக எங்கிருந்து தோன்றுகிறது?


இந்த வதந்திகள் எல்லாம் குறிப்பிட்ட நோக்கமுடைய சில பேரால் தான் துவங்கப்பட்டது உதாரணமா Piyush Manush இது போன்ற குற்றச்சாட்டுகளை முதலில் முன்வைத்தார். தம்மை ஒரு சமூக சீர்திருத்தவாதி என்றும் இயற்கை ஆர்வலர் என்றும் காண்பித்துக்கொண்டு காசுக்காக புரட்சி போராட்டம் என மக்களை குறிப்பாக இளைஞர்களை அரசுக்கு எதிராக திசை திருப்புவார் இது வெட்கப்பட வேண்டிய விஷயம்.


இவர்கள் மிஸ்டர் சரவணன் சந்திரசேகரன் என்பவரின் ஃபேஸ்புக் கணக்கில் ஒரு மேப்பை தயாரித்து வெளியிட்டனர். அதில ஈஷா யோகா மையம் காட்டில் இருப்பதாக தவறான குற்றச்சாட்டு முன்வைத்தனர். ஈசா யோகா மையமும் மற்றும் ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட் இதில் உண்மைத்தன்மை இல்லை என உறுதிப்படுத்தி உள்ளது.



பின்னால் சரவணன் சந்திரசேகரன் இந்த மேப்பை வெளியிட்டதில் ஆய்வில் சில தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்டார்.
இதோ அவரே அளித்த பதில் உங்கள் பார்வைக்கு


சரவணன் தன்னுடைய கூகுள் மேப் படம் பற்றிய கருத்து தவறானது என்று பின்னால் ஒப்புக்கொள்கிறார்.


ஏன் இன்றும் இது போன்ற புரளிகள் நம்பப்படுகிறது?

மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள சில நபர்களை பற்றி கிசுகிசு பேசுவது சிலருக்கு ஆர்வம் அதிகம். இவர்கள் உண்மை எதுவென தெரிந்து கொள்வதற்கு நேரம் கூட ஒதுக்குவது இல்லை வெறுமனே குறை கூறிக்கொண்டே இருப்பார்கள்.
இவர்களால் உண்மையான கருத்தை விட போலியான கருத்து மிக விரைவாக பரப்பப்படுகிறது. அதனால் பொதுமக்கள் குழம்பிப் போகிறார்கள சில நேரங்களில் பப்ளிக் சேனல்களும் தமது சொந்த TRP காக இப்படி கிசுகிசு பேசி பொய்யை பெரிது படுத்தி விட்டது. அப்படி இருந்த போதிலும் சில பொறுப்பான நல்ல ஊடகங்களும் சரியான கருத்தை மக்களிடம் சேர்ப்பதில் கவனம் கொண்டுள்ளது.

மேலும் இதுபோன்ற தகவல்களுக்கு subscribe செயுங்கள்...

Comments